கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி

கோவை: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு உடுமலை அருகே உள்ள ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி, இலவச கல்வியை வழங்கி வருகிறது.

கோவை: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு உடுமலை அருகே உள்ள ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி, இலவச கல்வியை வழங்கி வருகிறது. 

உலகளவில் யோகாவினுடைய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் யோகாவை அறிவியலாக ஏற்றுக்கொண்டு அதன் பயன்களை உணரத் தொடங்கியதால் கடந்த மூன்றாண்டு காலமாக யோக தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. யோகாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் முயற்சியாக ஸ்ரீ பரஞ்சோதி யோகாக் கல்லூரி நாட்டிலேயே யோகாவுக்கென துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு உடுமலை திருமூர்த்தி மலைப் பகுதியில் நடைபெறும் யோகா கல்லூரியில் ஆறு மாத சான்றிதழ் படிப்பு, பட்டயம் மற்றும் பட்டய மேற்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை யோகா முழுநேர படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.



இந்தப் படிப்புகளில் தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாணவ, மாணவிகள் 39 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முற்றிலும் இலவச கல்வி வழங்கி வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் யோகா உடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு, சிறந்த யோகா ஆசிரியர்களாக உருவாக்கப்பட்டு வருகிறார்கள். படிக்கும்போதே அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சியை யோகக் கல்லூரி மாணவ, மாணவிகள் வழங்கி வருகின்றனர். ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய  60 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து இலவச கல்வியை வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டில் புதிதாக சேரும் மாணவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தால் அவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வறுமை ஒரு தடையல்ல. கற்பதற்கு ஆர்வமும், விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையும் இருந்தால் போதும். நாமும் இந்த சமுதாயத்தில் சாதனையாளராக மட்டுமல்ல, அனைவரையும் நேசிக்கக்கூடிய மனிநேயமிக்கவராக வர முடியும்," என்கிறார் பரஞ்சோதி யோகக் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன். 

யோக ஆரோக்கியமான வாழ்விற்கு மட்டுமல்ல, சந்தோஷமான, அமைதியான மற்றும் சமாதானமான வாழ்க்கைக்கு உதவும் இயற்கையைப்போல என்பதை நிதர்சனமாக்கி வருவது அனைவருக்கும் பெருமையே.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...