வால்பாறையில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் காயம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

அக்காமலை எஸ்டேட்டில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர், முடக்கு வளைவு பாலத்தின் அருகே நிலைதடுமாறி சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிராக்டரில் பயணம் செய்த மாடசாமி (38), பக்கிராம் (32), திருமுருகன் (35), விஜயகுமார் (28), தினேஷ்குமார் (32), ராகுல் (28), காளிமுத்து (30) மற்றும் ஓட்டுநர் காளிமுத்து ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, அருகில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகே உள்ள கருமலை எஸ்டேட் தோட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தோட்ட அதிகாரிகள் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...