போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வரமுடியுமா..? எச். ராஜாவுக்கு ஆ. ராசா சவால்

கோவை : தமிழகத்தில் சர்ச்சைக் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக வர முடியுமா..? என தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

கோவை : தமிழகத்தில் சர்ச்சைக் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக வர முடியுமா..? என தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் தி.மு.க., ஈரோடு மண்டல மாநாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சனைக்காக முதலமைச்சராக இருந்த காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஒரு துரும்பை கூடத் தூக்கிப் போடவில்லை. தன்மானத்தை விட இனமானம் முக்கியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால், தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ராஜினாமா செய்யலாம் என்ற ஸ்டாலினின் யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா தன்மானமுள்ள மனிதனாக இருந்தால் போலீசார் பாதுகாப்பு இல்லாமல் வந்து பார்க்கட்டும். நீட் விலக்கு, காவிரி நதிநீர் உரிமைகளைப் பெற்று தராத தமிழக அரசு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ரூ. 46 கோடியில் நினைவு மண்டபம் கட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கல்லறையில், அரசியல் சட்டத்தை படுகொலை செய்த கொள்ளைக்காரி இங்கு உறங்குகிறாள் என எடப்பாடி பழனிசாமி எழுத வேண்டும், எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...