‘லோக் ஆயுக்தா’ உடனடியாக அமைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் அரசுத் துறைகளில் நடைபெறும் ஊழல்களைக் கண்டறிந்து விசாரிக்க கடந்த 2013-ம் ஆண்டு, ‘லோக் ஆயுக்தா’ மற்றும் ‘லோக்பால்’ சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக எந்த ஒரு தனி மனிதனும் வழக்குத் தொடர முடியும். இதன் விசாரணையில், அரசியல்வாதிகளோ அல்லது அரசு அதிகாரிகளின் ஊழலோ நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்குப் பதவி பறிப்பு, சம்பள நிறுத்தம், பணிநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும். 

இந்தச் சட்டம், முதல்முதலாக மகாராஷ்டிராவில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 15 மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்தது. தற்போது, தமிழகம், தெலங்கானா, புதுச்சேரி, அருணாசலப்பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்னும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு, இன்னும் ‘லோக் ஆயுக்தா’ அமைக்காததற்கான காரணம் குறித்து அனைத்து மாநிலங்களும் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன்படி, தமிழகத்துக்கான மனுவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா தொடங்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து, வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...