நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிப்பு

நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து சி.பி.எஸ்.இ., அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து சி.பி.எஸ்.இ., அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு அடுத்த மாதம் 6-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ., நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும். ஷூ அணியக் கூடாது. பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது. பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம்.

தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது அறிவுறுத்தப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சி.பி.எஸ்.இ., நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...