திருப்பூர் : ஜம்மு காஷ்மீரில் சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் காணாமல் போன 8 வயது சிறுமி கோவிலில் வைத்து சில நபர்களால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது .
இதற்கு பல்வேறு தரப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாநகராட்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.