மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி

கோவை : குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் களப்பணி குறித்து பயிற்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை : குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் களப்பணி குறித்து பயிற்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் கல்லார், எஸ்.எம் நகர், ஆலாங்கொம்பு, அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு மையங்கள் மூலம் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு மத்திய அரசின் குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் மூலம் கல்வி உபகரணங்கள், இலவச தொழில் கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன் மாதம் ரூ. 400 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த மையங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் அதன் களப்பணிகள் குறித்த பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள ஈடன் கார்டனில் இயற்கை விவசாயம் செய்து வரும் மத்திய அரசின் விருது பெற்ற ராஜரத்தினம் மருத்துவ குணம் வாய்ந்த நோனி, முள்சீதா, மற்றும் கொய்யா, பப்பாளி உள்ளிட்ட இயற்கை விவசாயம் குறித்த களப்பயிற்சியை மாணவர்களுக்கு அளித்தார். 

மேலும், குளோனிங் முறையில் இலையில் இருந்து புதிய நாற்றுகளை உற்பத்தி செய்வது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அத்துடன் இயற்கை சூழலை காக்க சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...