அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன்முறை படுத்தும் சிறப்புத் திட்டம்

மேட்டுப்பாளையம்: அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் வாங்கியுள்ள வீட்டு மனைகளை வரன்முறை படுத்த அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்ததால் பத்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் திணறினர்.

மேட்டுப்பாளையம்: அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் வாங்கியுள்ள வீட்டு மனைகளை வரன்முறை படுத்த அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்ததால் பத்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் திணறினர்.

அரசிடம் முறையாக அனுமதி பெறாத லே-அவுட்களில் தனி வீட்டு மனைகளை வரன்முறை படுத்தும் இரண்டு நாள் சிறப்பு முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை பேரூராட்சி மற்றும் பத்து ஊராட்சிகளில் உள்ள மனைகளை மட்டும் வரன்முறை படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதில் தங்களது வீட்டு மனைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி ஏராளமானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.

இதனையடுத்து விண்ணப்பதாரரின் இணையதள ஒப்புகை நகல், மனை சான்று, மனை குறித்த வரைபடம், விற்பனை ஆவணம், பட்டா, சிட்டா, வில்லங்க சான்று ஆகியவற்றை இந்த சிறப்பு முகாமில் மாவட்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகர் மற்றும் ஊராட்சி செயலர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சரி பார்த்தனர். ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களின் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சரி பார்க்க அதிக நேரமானதால் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திணறினர்.



தங்களது மனைகளுக்கு அங்கீகாரம் பெற வரன்முறை கட்டணத்தை வங்கியிலும், அபிவிருத்தி கட்டணத்தை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகளிடம் பொது மக்கள் செலுத்தினர். இதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் சிறப்பு கவுண்டர்கள் ஒன்றிய அலுவலகத்திலேயே திறக்கப்பட்டு பொதுமக்களிடம் பணம் பெற சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த வகையில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ.99 லட்சம் வரை வசூல் ஆனது.

இந்த இரண்டு நாள் சிறப்பு முகாமில் மக்களின் அனைத்து விண்ணப்பங்களையும் முழுமையாக சரி பார்த்து மனைகளை வரைமுறை படுத்த இயலாத காரணத்தினால், இந்த வரன்முறை படுத்தும் சலுகை திட்டம் வரும் மே மாதம் மூன்றாம் தேதி வரை நீடித்து அந்தந்த பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...