முடிவுக்கு வந்தது சினிமா ஸ்ட்ரைக்

சென்னை: சினிமா சங்கத்தினர் நேற்று நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை: சினிமா சங்கத்தினர் நேற்று நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கட்டணத்தைக் குறைத்தல், கேளிக்கை வரி நீக்கம், டிக்கெட் கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங், தின்பண்டங்களின் விலை குறைப்பு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரைத் துறையினரின் கடந்த 47 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக புதிய திரைப்படங்கள் வெளியாகாத காரணத்தால் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று கூறப்பட்டது. அதை தொடர்ந்து கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கும், வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்கள், டிஜிட்டல் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புதிய படங்கள் வெளியீடு மற்றும் படப்பிடிப்பு வேலைகளைத் துவங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...