கோவை: இனி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றுப்படுகையில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் எச்சரித்துள்ளார்.

நொய்யல் ஆற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது. அந்த வீடியோ-வில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறைக்கு லஞ்சம் கொடுத்து தான் மணல் அள்ளுவதாக சிலர் பேசும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நொய்யலில் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
தொடர்ந்து, விதி மீறி நொய்யலில் மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன் அறிவித்துள்ளார்.