தமிழ்நாடே தண்ணீருக்கு போராடுது..! கோவையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகுது..!

கோவை: கோவையை அடுத்த விளாங்குறிச்சி - சத்தி சாலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: கோவையை அடுத்த விளாங்குறிச்சி - சத்தி சாலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களுக்கு மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சரவணம்பட்டி அருகே உள்ள விளாங்குறிச்சி பஞ்சாயத்துக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணையின் தண்ணீர் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விளாங்குறிச்சி - சத்தி சாலை வழியாக நீர் வீணாகி வருகிறது.



அந்த வழித்தடத்தில் செல்லும் குடிநீர் குழாய் சாலைக்கு அருகில் 3 முதல் 5 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ளது தற்போது அதில் உடைப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.சதீஷ் குமார் கூறுகையில், "15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சாலையில் வீணாகிறது. கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த சூழ்நிலையில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இப்படியே தொடர்ந்தால் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு வரும். அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பைச் சரி செய்ய வேண்டும்." என்றார்.

அந்த பகுதியை கடந்து செல்லலும் வாகனங்கள், சாலையில் தேங்கிக் கிடக்கும் நீரை, நடந்து செல்வோர் மீது வாரி இறைத்துச் செல்வதாகவும், அவ்வப்போது சிறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கொந்தளிக்கின்றனர் அப்பகுதி மக்கள். 

இந்த நிலையில், குடிநீர் வீணாகி வருவதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக "15 நாட்களாக குடிநீர் வீணாகச் செல்கிறது. நடவடிக்கை எடுக்காத அரசுக்கு இது அவமானம்" என்ற பதாகை ஒன்று அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.



சமூக ஆர்வலர் அருள்ராஜ் கூறுகையில், "குடிநீரை வீணாக்கக் கூடாது என்று அறிவுரை கூறும் அரசு சாலைகளில் குடிநீரை விணாகிக் கொண்டிருக்கிறது. பழுது ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், அதனை விரைந்து சரிப்படுத்த வேண்டும். அதிகாரிகளின் அலட்சியத்தால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவது வேதனையளிக்கிறது." என்றார்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளர் ராதா கூறுகையில், "இது முக்கியமான பிரச்சினை, மின்தடை நாளன்று தான் இதனை முழுவதுமாக சரி செய்ய முடியும். மற்ற நாட்களில் சரி செய்ய முயற்சி மேற்கொண்டால், பிற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைப்படும். ஆகவே, மின் தடையன்று இப்பணியை மேற்கொண்டு விரைந்து தீர்வு காணப்படும்." என்றார்.



இன்று தமிழகமே தண்ணீருக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், குடிநீர் வீணாகிவருவது போது மக்களிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...