கோவை : கோவை ஆலாந்துறை அருகே யானை தாக்கியதில் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை : கோவை ஆலாந்துறை அருகே யானை தாக்கியதில் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலாந்துறை அடுத்த காருண்யா பல்கலைக்கழகம் பின்புறம் சப்பானிமடம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (85). கூலி தொழிலாளியான இவர், அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றார். குளித்து முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில், ராமசாமி பலத்த காயமடைந்தார். இதையறிந்த அப்பகுதியினர், அவரை உடனடியாக மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இதனிடையே, உயிரிழந்த ராமசாமியின் குடும்பத்திற்கு ரூ. 50,000 நிவாரண நிதியை போளுவாம்பட்டி வன அதிகாரி வழங்கினார்.