திருப்பூர்: ஜம்மு - காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமிக்கு திருப்பூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர்: ஜம்மு - காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமிக்கு திருப்பூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த வாரம் காணாமல் போன 8 வயது சிறுமி ஆஷிபா, அங்குள்ள கோவிலில் வைத்து சில நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்களும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலை பக்கத்தில் திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரசார், மறைந்து போன 8 வயது சிறுமியின் படங்களை ஏந்தியவாறு வாயில் கருப்புத்துணி கட்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது, பெண்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கோரி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.