கோவை : கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த 3 நாட்களைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம் இரவு நேரங்களில் 24.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும்.
திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் கோவையைப் பொறுத்தவரையில் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது.
விவசாயிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நிலத்தை அடுத்த அறுவடைக்கு தயார் செய்து வைக்கலாம். மழை அவ்வப்போது பெய்து வருவதினால் தக்காளி, வெள்ளை முள்ளங்கி, கீரை வகைகள் ஆகியவை நன்கு விளையும் வாய்ப்புள்ளது," என்றார்.