நீலகிரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான பூங்காவை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது, உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மூட வேண்டும், தமிழகத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பைத் தர வேண்டும், கர்நாடக பூங்கா என்ற பெயரை தமிழக அரசு பூங்கா என மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.