கோவையில் மூன்று கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கோவை : முறையற்ற விநியோகத்தால் ஆறு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : முறையற்ற விநியோகத்தால் ஆறு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டதாபுரம், மத்தம்பாளையம், பிளிச்சி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

மாதம் ஓரிரு முறை மட்டுமே குறைந்த அளவில் குடிநீர் வழங்கப்படுவதால் இக்கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குற்றம் சாட்டும் கிராம மக்கள், அப்பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாகவும், அதனை சரி செய்து சீராக குடிநீர் வழங்க கோரி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். 

மேலும், இக்கிராமங்களில் போடப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகளும் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடப்பதால் கோடைக்காலத்தில் தண்ணீரின்றி தவித்த மக்கள் இன்று கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் மூன்று மணிநேரம் நீடித்த இந்த மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...