காவிரி விவகாரம் : வரைவு செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது. தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது. இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அத்துடன், மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின் இடைக்கல மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. 

அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது. மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்த பின்பே இதுபற்றி முடிவு செய்வோம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...