கோவை : நாளை நடைபெற உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தமிழக ஆளுநர் பெயரை சேர்த்த காளப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காளபட்டி நகர கூட்டுறவு கடன் சங்கத்தின்(கே1691) நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. இதில் கூட்டுறவு சங்கத்தில் 11 உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் 119 வரிசை எண்ணில் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் 'ஆளுநர், தமிழ்நாடு அரசு' எனவும், தந்தை பெயர் என்ற இடத்தில், 'கவர்மெண்ட்' என்றும், முகவரியில் 'தமிழ்நாடு' என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
கோவை முழுவதும் 250-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 80 சதவீதமான கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறாமலே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 27-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற பல்வேறு மோசடிகளை ஆளுங்கட்சியினர் செய்து வரும் நிலையில் காளப்பட்டி நகரக் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக நடைபெறும் தேர்தலில் தமிழக ஆளுநரை உறுப்பினராக சேர்த்து விட்டு அவரது தந்தை பெயர் கவர்மெண்ட் என குறிப்பிட்டிருந்தது உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.