வேட்புமனுவின் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார் - விசாரணை ஆணையம்

வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக அரசு மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று தெரிவித்திருந்தார்.

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்கள் 10-க்கும் மேற்பட்ட முறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டதாகவும் பாலாஜி தெரிவித்ததாக செந்தூர்பாண்டியன் கூறினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் சிகிச்சை தகவல்களை பாலாஜி கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை விசாரிக்க மனு தாக்கல் செய்வோம் எனவும் செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா கைரேகை வைக்கும் போது சுயநினைவுடன் இருந்ததாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...