முதுமலை புலிகள் காப்பக யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது.



முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்கப்படும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது. அன்று முதல் முகாமில் உள்ள 23 யானைகளுக்கு இக்காலகட்டத்தில் சிறப்பு சிகிச்சைகள், சத்துள்ள உணவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. 

இந்நாட்களில் யானைகளை வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தாமலும், சவாரிக்கு பயன்படுத்தாமலும் வைத்திருந்தனர். இன்றுடன் 48 நாட்கள் முகாம் நிறைவு பெற்ற நிலையில், யானைகளுக்கு பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெற்றது. பின்னர் சுவையான பழங்கள், கரும்பு ஆகியவற்றுடன் உணவு வழங்கப்பட்டு முகாம் நிறைவு பெற்றது. இந்நிலையில், நாளை முதல் வழக்கம்போல, சுற்றுலாப் பயணிகளுக்காக யானைச் சவாரி தொடங்கப்படவுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...