கோவை எல் அன்டி பைப்பாஸ் சாலையில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, ஆம்புலன்ஸ் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர்.
கோவை: கோவை எல் அன்டி பைப்பாஸ் சாலையில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, ஆம்புலன்ஸ் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர்.
சூலூர் அருகே உள்ள சிந்தாமணிப்புதூர் பகுதியில் கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமைய்யன் மகன் பசுபதி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர், சிங்காநல்லூர் பகுதியிலுள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர், எல் அன்டி பைபாஸ் சாலையின் அவினாசி சாலை சந்திப்பு பகுதியில் தனது வாகனத்தை நிறுத்துவது வழக்கம். நேற்று இரவு வழக்கம்போல, இவர் அப்பகுதியில் பணியில் இருந்துள்ளார். இவருக்கு துணையாக அவரது நண்பர் ராஜேஷ் என்பவரும் உடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பணி முடிந்து சிந்தாமணிப்புதூரில் உள்ள தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது, எல் அன்டி சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்கும் பணியில் இருந்த சக்திவேல் என்பவரும் பணி முடிந்து ஆம்புலன்சில் லிப்ட் கேட்டு வந்துள்ளார். இவர்கள் வந்த வாகனம் பைபாஸ் சாலையில் அத்தப்பகவுண்டன் புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரி ஆம்புலன்ஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பசுபதி மற்றும் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சக்திவேல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
கோவையின் பிரதான சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.