கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு : மாதிரி குழாயுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்

கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர் மாதிரி குழாயுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர் மாதிரி குழாயுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கெயில் எரிவாயு திட்டத்தை கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாகக் கொண்டு செல்ல மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு உறுப்பினர்கள் கெயில் திட்டத்தின் மாதிரி குழாயுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். 



இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், "தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயிர்கள் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும். கோவை மக்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலை துறை வழியாக கெயில் குழாய்களை கொண்டு செல்லாம். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்." என்றார். 

மாவட்ட ஆட்சியரிடம் கெயில் திட்டத்தின் மாதிரி குழாயுடன் விவசாயிகள் மனு அளிக்க வந்ததால் அவ்வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...