கோவை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சித்ரா பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசிய, சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், விமான நிலைய வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், இன்று காலை விமான நிலைய வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் டிராலியில் வைக்கப்பட்ட பை வெகுநேரமாக யாரும் எடுத்துச்செல்லப்படாமல் இருந்தது. இதனை கவனித்த விமான நிலைய பாதுகாப்பு படையினர் அங்கு சென்று வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர்.

பின்னர் அதனை திறந்து பார்த்த போது உடமைகள் மட்டுமே இருந்தன. இதனை பயணிகள் யாரேனும் மறந்து விட்டுச்சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பரபரப்பான நேரத்திற்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்த மர்ம பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.