மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சார்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் மனு

ஆசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை : ஆசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.



முன்னதாக, இது குறித்து கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் கொள்கை விளக்க செயலாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'கல்வி அலுவலரின் தவறான செயல்பாடுகளால் ஆசிரியர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். சென்ற ஆண்டு தமிழக அரசால் கோவைக்கு வழங்கப்பட்ட 11 புதிய முதுகலை பணியிடங்கள் இன்று வரை நிரப்பப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் TRB/TET தேர்வுகள் மூலம் நியமிக்கப்படாமல், அரசு விதிகளை மீறி, பணி மாறுதல் மூலம் மட்டுமே நியக்கமிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும், அரசு விதிகளுக்கு புறம்பாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது, ஏழு ஆண்டுகளாக மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்றார்.

கல்வி அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்கு முன்பு, மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கூட்டம் நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...