மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் - காவல் ஆணையர்

மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா கூறியுள்ளார்.

கோவை: மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா கூறியுள்ளார். 



ஏழ்மையாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் பெரும்பாலான ஏழை எளிய பெண்கள் மாதவிடாய் காலத்தில் நாப்கின்களை பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த அமைப்புகள் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுடனர். அதன்படி, சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் தஸ்யா அமைப்புடன் இணைந்து கோவை அரசு மருத்துவமனையில் நாப்கின் வழங்கும் இயந்திரத்தை அமைத்தனர். மேலும், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையங்களில் இந்த நாப்கின் வழங்கும் இயந்திரங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாப்கின் ரூ.5-க்கு வழங்கப்படும் என்றும், அவ்வாறு வசூலிக்கப்படும் தொகை பெண்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று அந்த அமைப்பினர் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். 



நிகழ்வில் காவல் துறை ஆணையாளர் பெரியய்யா பேசுகையில், "மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும். தாய்மை பெண்ணின் பெருமை. மாதா பிதா குரு தெய்வம் என்ற வாழும் தெய்வங்களில் தாய் என்ற பெண்ணே முதலானவள். செவிலியர்கள் தாய் போன்றவர்கள். இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அன்னை தெரசா போல சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்." என்றார்.



தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் பேசுகையில், "பெண் சிசு கொலைகளைத் தடுக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைகளின் பாலினம் சொல்ல அரசு தடை விதித்து உள்ளது. அதேபோல், தொட்டில் குழந்தை திட்டம் மூலமும் பெண் குழந்தைகளை அரசு பாதுகாத்து வருகிறது. தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...