மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா கூறியுள்ளார்.
கோவை: மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா கூறியுள்ளார்.

ஏழ்மையாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் பெரும்பாலான ஏழை எளிய பெண்கள் மாதவிடாய் காலத்தில் நாப்கின்களை பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த அமைப்புகள் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுடனர். அதன்படி, சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் தஸ்யா அமைப்புடன் இணைந்து கோவை அரசு மருத்துவமனையில் நாப்கின் வழங்கும் இயந்திரத்தை அமைத்தனர். மேலும், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையங்களில் இந்த நாப்கின் வழங்கும் இயந்திரங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாப்கின் ரூ.5-க்கு வழங்கப்படும் என்றும், அவ்வாறு வசூலிக்கப்படும் தொகை பெண்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று அந்த அமைப்பினர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் காவல் துறை ஆணையாளர் பெரியய்யா பேசுகையில், "மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும். தாய்மை பெண்ணின் பெருமை. மாதா பிதா குரு தெய்வம் என்ற வாழும் தெய்வங்களில் தாய் என்ற பெண்ணே முதலானவள். செவிலியர்கள் தாய் போன்றவர்கள். இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அன்னை தெரசா போல சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்." என்றார்.

தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் பேசுகையில், "பெண் சிசு கொலைகளைத் தடுக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைகளின் பாலினம் சொல்ல அரசு தடை விதித்து உள்ளது. அதேபோல், தொட்டில் குழந்தை திட்டம் மூலமும் பெண் குழந்தைகளை அரசு பாதுகாத்து வருகிறது. தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. என்றார்.