நீலகிரியில் புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.
நீலகிரி : நீலகிரியில் புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களுள் ஒன்றான சிரியூர் மாரியம்மன் கோவில் உள்ளது. கூக்கல் ஊராட்சிக்குட் பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. அந்த கோவிலின் பிரதான தெய்வமான மாரியம்மனை வழிபட அண்டை மாநிலமான கர்நாடகா கேரளா-வில் இருந்தும் நீலகிரியின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.

8 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் இந்த ஆண்டு திருவிழாவில் பூ குண்டம் சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு மாத காலம் விரதமிருக்கும் பக்தர்கள் வனப்பகுதியில் இருந்து தேவையான விறகுகளைச் சேகரித்து வந்து குண்டம் அமைப்பர். இந்த பூ குண்டத்தை முன்னிட்டு அம்மனுக்குச் சிறப்பு அபிசேக அலங்காரம் நடைபெற்றது.