கோவையில் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க உத்தரவு

வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உலாவரும் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உலாவரும் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

செய்தியாளராகப் பணி புரியும் ஒருவர் பணி நிமித்தமாக நாள்தோறும் பல்வேறு இடங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் செல்ல நேரிடும். இதனைக் கருத்தில் கொண்டு செய்தியாளர்கள் வாகனங்களில் "பிரஸ்" (PRESS) என்ற ஸ்டிக்கரை பொருத்தியுள்ளனர். இதன் மூலம், குறித்த நேரத்திற்குள், குறித்த இடத்திற்கு பத்திரிக்கையாளர்களால் செல்ல முடிகிறது.

ஆனால், பத்திரிக்கையாளர்கள் அல்லாத சிலரும் அவர்களது வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. அவ்வாறு, போலியாக பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்தது, போலியாக பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளவர்களைப் பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நேற்று வழங்கப்பட்ட இந்த உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசு முத்திரையுடன் வழங்கப்பட்ட பிரஸ் ஸ்டிக்கர்களைப் போல போலியாக பிரஸ் ஸ்டிக்கர்களை தயாரித்து வாகனங்களில் ஒட்டியுள்ள போலி பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதே போல் சமீபத்தில் சென்னை மற்றும் சேலத்தில் போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...