கலாம் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்த ஆளுநர்

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார்.


மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதனையடுத்து, கோயிலுக்குள் நடைபெற்ற ஸ்படிக லிங்க பூஜையில் ஆளுநர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்கு குடும்பத்தினருடன் சென்று, கலாமின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார். அப்போது, கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்கயாருக்கு பொன்னாடை போற்றி மரியாதை செலுத்தினார். பதிலுக்கு அவரும் பொன்னாடை அணிவித்தார். பின்னர், இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதைத்தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ராமநாதபுரத்தில் ஆளுநரின் சுற்றுப்பயணத்தையொட்டி ராமநாதபுரம், திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...