கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவிருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
கோவை : கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவிருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் நேஷனல் ரூர்பன் மிஷன் NRuM- திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கீழ்க்கண்ட இனங்களில் பயிற்சி அளித்திட விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
ரூர்பன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி-யின் பாடப்பிரிவின் வகைகள், அடிப்படை தையல் பயிற்சி, ஆயத்த ஆடை பயிற்சி, கணினி பயிற்சி (மல்டி மீடியா), சி.என்.சி., மில்லிங், ஓட்டுநர் பயிற்சி (பேட்ஜ் உடன்), அழகுகலை மற்றும் விருந்தோம்பல் பயிற்சி தொடர்பான பாடப்பிரிவுகள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் கருத்துருக்களை வரும் 05-ம் தேதிக்குள் இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கோவை என்ற முகவரியில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.