நீலகிரியில் மெகா காய்கறி சந்தை அமைக்க தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்குத் தீர்வு காணும் வகையில், மாபெரும் காய்கறி சந்தை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்பது அம்மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்குத் தீர்வு காணும் வகையில், மாபெரும் காய்கறி சந்தை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்பது அம்மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மற்றும் மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ், சைனீஸ் காய்கறிகள் என பல்வேறு காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இந்த மலை தோட்ட காய்கறிகள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் மவுசு அதிகம்.



இந்நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் மலை தோட்ட காய்கறிகள் தினசரி லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் சந்தையில் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ் உட்பட காய்கறிகளும் ஏலம் விடப்படும் நிலையில், முன் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் விளை பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. மதியம் 12 மணிக்குள் உதகையில் இருந்து மலை காய்கறிகளை மேட்டுப்பாளையம் சந்தைக்கு சென்று விட வேண்டும். இதனால், போதிய நேரமின்மை, கூலியாட்கள் செலவு என மூதலிட்டு வருமானமே கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலையடைகின்றனர்.



எனவே, நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஒரு மெகா காய்கறி சந்தையை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.



இதுகுறித்து விவசாயி பிரகாஷ் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் விளையக் கூடிய மலை தோட்ட காய்கறிகளை மேட்டுப்பாளையம் சந்தைக்கு எடுத்து சென்று ஏலம் விட வேண்டிய நிலை இருப்பதால் லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலி என நாங்கள் போட்ட முதலீடு கூட கிடைப்பதில்லை. எனவே, மாவட்டத்தில் ஒரு மெகா காய்கறி ஏலச் சந்தையை அமைக்கும் முயற்சியை அரசு எடுக்க வேண்டும்," என்றார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...