காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் : விண்ணை பிளக்கும் கோவிந்தா, கோவிந்தா கரகோஷம்

கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற மாசிமக தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவை : கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற மாசிமக தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை அரங்கநாதர் கோவில், வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதாகும். சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் இக்கோவிலுக்கு புதிய தேரை வழங்கி மாசி மகம் பௌர்ணமி தினத்தன்று தேரோட்டத்தை நடத்தி பெருவிழாவாக நடப்பதை துவக்கி வைத்துள்ளார். 

அதன்படி, இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த மாதம் 23-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் அரங்கநாதர் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி நடைபெற்று வந்தன. இந்த நிலையில், இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள கோவில் முன்பாக இருந்து தேரோட்டம் புறப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தபராக் என்ற கோஷத்துடன் வடம் பிடித்திழுக்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் பவனி வந்தது.

இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என பல மாவட்டங்களில் இருந்தும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். காரமடையில் இன்று மாலை நடைபெற்ற திருத்தேரோட்ட நிகழ்ச்சியினை முன்னிட்டு கோவை, மேட்டுப்பாளையம் இடையேயான சாலை மார்க்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியினை காரமடை பகுதியில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...