கேரளாவில் உணவுப் பொருள் திருடியதாக பழங்குடியின இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மாவோயிஸ்ட் கோஷம் எழுப்பியதால் கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : கேரளாவில் உணவுப் பொருள் திருடியதாக பழங்குடியின இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மாவோயிஸ்ட் கோஷம் எழுப்பியதால் கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ் (40), அவரது மனைவி ஷைனி (35), அனூப் மேத்யூ(40), கண்ணன்(40), வீரமணி(42) ஆகியோரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். தேசதுரோகம், கூட்டுச்சதி, தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்து கோவை மத்திய சிறையில் ஐவரையும் அடைத்தனர். இதில், ரூபேஷ் மட்டும் கேரள மாநிலம் திருசூர் சிறைக்கு மாற்றப்பட்டார் .ஷைனி, அனூப் மேத்யூ, கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறையில் உள்ளனர்.
இவர்கள் 5 பேர் மீதான வழக்கு விசாரணை, கோவை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இதற்காக, கேரள மாநிலம் திருசூரில் இருந்து மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை நீதிமன்றத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் நுழைந்ததும், கேரளாவில் பசிக்காக திருடிய பழங்குடியினத்தை சேர்ந்த மது என்பவரை அடித்து கொலை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டார். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் ரூபேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஷைனி, அனூப்மேத்யூ, கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின்பு வழக்கினை வரும் 14ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. பலத்த பாதுகாப்புடன் ரூபேஷை போலீசார் மீண்டும் கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.