தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும் என மிஸ் இந்தியா போட்டியின் பயிற்சியாளர் ருக்ஷனா எய்ஸா கூறியுள்ளார்.
கோவை: தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும் என மிஸ் இந்தியா போட்டியின் பயிற்சியாளர் ருக்ஷனா எய்ஸா கூறியுள்ளார்.

கோவை மாவட்ட என்டர்புயூனர்ஸ் அமைப்பு சார்பில் தொழில்துறையின் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் மிஸ் இந்தியா போட்டியின் அதிகாரப்பூர்வ பயிற்சியாளர் ருக்ஷனா எய்ஸா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்கும் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில், "அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்டர்புயூனர்ஸ் அமைப்பில் 52 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அமைப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்." என்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருக்ஷனா எய்ஸா, "இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் துறையினர் தங்கள் தகவல் பரிமாற்றங்களை மேம்படுத்தி கொள்ளவும் அதை எவ்வகையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட சிந்தனைகள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் அதிக திறமை உடையவர்கள். மேலும், இந்த நிகழ்ச்சி தொழில் துறையினருக்குப் பயனுள்ளதாக அமையும். தொழில் துறையினர் எந்த இடத்திலும் தங்களை திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும்." என்று பேசினார்.