தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த முன் வரவேண்டும்

தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும் என மிஸ் இந்தியா போட்டியின் பயிற்சியாளர் ருக்‌ஷனா எய்ஸா கூறியுள்ளார்.

கோவை: தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும் என மிஸ் இந்தியா போட்டியின் பயிற்சியாளர் ருக்‌ஷனா எய்ஸா கூறியுள்ளார். 



கோவை மாவட்ட என்டர்புயூனர்ஸ் அமைப்பு சார்பில் தொழில்துறையின் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் மிஸ் இந்தியா போட்டியின் அதிகாரப்பூர்வ பயிற்சியாளர் ருக்‌ஷனா எய்ஸா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்கும் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில், "அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்டர்புயூனர்ஸ் அமைப்பில் 52 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அமைப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்." என்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருக்‌ஷனா எய்ஸா, "இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் துறையினர் தங்கள் தகவல் பரிமாற்றங்களை மேம்படுத்தி கொள்ளவும் அதை எவ்வகையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட சிந்தனைகள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் அதிக திறமை உடையவர்கள். மேலும், இந்த நிகழ்ச்சி தொழில் துறையினருக்குப் பயனுள்ளதாக அமையும். தொழில் துறையினர் எந்த இடத்திலும் தங்களை திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும்." என்று பேசினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...