மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாள் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு மோதிரம் மற்றும் தங்க சங்கிலிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை: மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாள் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு மோதிரம் மற்றும் தங்க சங்கிலிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
நேற்று கோவை அரசு மருத்துவமனையில் தங்க சங்கிலி மற்றும் மோதிரங்களை 11 ஆண் குழந்தைகளுக்கும் 8 பெண் குழந்தைகளுக்கும் வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காவிரி நதி நீர் பிரச்சினையில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா சுப்ரிம் கோர்ட்டுக்கு சென்று தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைப் பெற நடவடிக்கை எடுத்ததின் பயனாக தற்போது 177.25 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும் என்று சுப்ரிம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த தண்ணீரை பெற்றுக் கொடுக்கவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
சிறுவாணி அணையில் இருந்து 60 கன அடி தண்ணீரை கேரள அரசு வன விலங்குகளுக்கும், மலை வாழ் மக்கள் குடிப்பதற்கு திறந்து விடப்பட்டது குறித்து முதல் அமைச்சர் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளோம். அவரது உத்தரவின் பேரில் தமிழக தலைமை செயலாளர் கேரளா தலைமை செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து சிறுவாணி அணையில் இருந்து திறக்க பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதற்கு பிரதி பலனாக ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் கேரளாவிற்கு திறக்கப்பட்டது என்று கூறப்படுவது தவறு.
ஆழியாறிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கேரளா விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக, கேரளா பொது பணித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும், ஆழியாற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதால் அங்கு இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கூறி உள்ளது தொடர்பான பிரச்சனை குறித்து தமிழக துணை சபாநாயகர் மற்றும் சடட மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையை போக்க பரம்பிக்குளம் காடம்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கோரிக்கை முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது." என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.