கேரளாவுக்கு தண்ணீர் திறந்தவிட்ட விவகாரம் : 2 ஆயிரம் விவசாயிகள் போராட்டம்

ஆழியார் அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்ததை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி: ஆழியார் அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்ததை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் மூலம் திருமூர்த்தி அணையில் இருந்து ஜனவரி 31-ம் தேதியில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு 2 - வது சுற்று தண்ணீர் திறந்து விடபட்டு, விவசாயிகள் பாசனம் செய்து வந்தனர்.

இன்றுடன் முதல் சுற்று நிறைவடைந்து 2-ம் சுற்று தண்ணீருக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில், பரம்பிக்குளத்தில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சென்ற தண்ணிரை நிறுத்தி, ஆழியார் அணை மூலம் கேரளாவுக்கு, வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் மற்றும் பொங்கலூர் பகுதியில் இருந்து வந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதைக் கண்டித்தும், 2-ம் சுற்று தண்ணீரை திறந்து விட கோரியும் கோஷங்களை எழுப்பினர். 

கடும் வறட்சியில் பாசன நீரை நம்பி பயிர்கள் செய்திருந்த நிலையில் திடீரென்று 2-ம் சுற்று பாசன தண்ணீரை நிறுத்தியதால் தென்னை உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இனால் 2-ம் சுற்று தண்ணீர் திறக்கும் வரை போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட பேச்சுவார்த்தையில் கேரளாவுக்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த முடியாது என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 



விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக பி.ஏ.பி திட்ட அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...