சண்டிகரில் தமிழக மாணவர் உயிரிழப்பு: விசாரணை நடத்தக் கோரி பெற்றோர் கோரிக்கை

சண்டிகரில் மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் கிருஷ்ண பிரசாத் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும் இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சண்டிகரில் மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் கிருஷ்ண பிரசாத் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும் இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் ராமாஸ்வரம் கோவிலில் புரோகிதராக இருக்கிறார். இவரது மூத்த மகன் கிருஷ்ணபிரசாத். சண்டிகரில் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (pgimer)-ல் மருத்துவ மேல் படிப்பு முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணபிரசாத் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்ததாக அடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது பெற்றோர்கள் ராமசாமி , புவனேஸ்வரி ஆகியோர் சண்டிகர் புறப்பட்டுச் சென்றனர்.

வட மாநிலங்களில் படிக்கச்செல்லும் தமிழக மருத்துவ மாணவர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறப்பது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை. திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மற்றும் சரத் பிரபு இறப்புக்குப் பின்னாவது வட இந்தியாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு பேசியிருந்தால் கிருஷ்ணபிரசாத் உயிர் பிரிந்திருக்காது என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மர்மமான முறையில் மூன்று பேர் இறந்து பின்னும் அதற்கான காரணத்தை கண்டறிவதில் மத்திய அரசு அக்கறை எடுக்காதபோது, தமிழக அரசு, மத்திய அரசிற்கு அழுத்தம் தரவில்லை. தமிழக மருத்துவர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முன் வந்தால்தான் மர்ம மரணத்திற்குத் தீர்வு கிடைக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...