சுதந்திரப் போராட்ட வீரரின் பேரக்குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: சுதந்திரப் போராட்ட வீரரின் பேரக்குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரிபாய். சுதந்திரப் போராட்ட தியாகியான இவரது தந்தை ராஜகோபால், மூன்று முறை அலிபுரம், பெல்லாரி, பொள்ளாச்சி ஆகிய சிறைகளில் ஆங்கிலேயர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளார். மேலும், அவரது விலா எலும்புகள் உடைக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். கவர்னர் பட்வாரி ராஜகோபாலுக்குவ் தாமிர விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் வழங்கிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை வாங்கியுள்ளார். இவரும், இவரது மனைவியும் இறந்த பின்பு மிகவும் கஷ்டப்படுவதாக அவரது மகள் கஸ்தூரிபாய் தெரிவித்தார்.
கஸ்தூரிபாயின் கணவன் மற்றும் அவரது மகன் இறந்த பின்பு இரு பேரக்குழந்தைகளை வைத்துக்கொண்டு படிக்க வைக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளானார். மாவு அரைத்து தனது பேத்தியை எம்.ஏ. ஆங்கிலம் படிக்க வைத்தும், மற்றொரு பேரனை ஏழாம் வகுப்பு படிக்க வைத்தும் வருகிறார். மாவு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து இருவரையும் படிக்க வைப்பது சிரமமாக இருப்பதால், பேத்தியின் படிப்பை நிறுத்திவிட்டு மாவு அரைக்கும் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். வாடகை வீட்டில் வசித்து வரும் தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால், பேத்தி வித்யஸ்ரீக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரின் கொள்ளுப்பேத்திக்கு படிப்பதற்கும், வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவும் அரசு முன் வரவேண்டும். அரசு உதவிசெய்யாவிட்டாலும் தனியார் நிறுவனங்கள் முன் வந்து உதவிக்கரம், நீட்டினால் இவர்களுக்கு சுதந்திரம் கிடைக்க வாய்ப்பாக இருக்கும்.
கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் மாவை அரைத்து விற்கும் வித்யஸ்ரீ பாட்டியையும், தனது சகோதரனையும் படிக்க வைத்து, வீட்டு வாடகையையும் கொடுக்க வேண்டிய சூழலில் இருப்பதால், இதயத்தில் மனிதநேயம் உள்ளவர்கள் உதவுவார்களா என்ற ஏக்கத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.