காங்கயம் அருகே கோயிலுக்கு சென்று திரும்பியவர்களின் கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் கவிழ்ந்ததில் 4 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர்: காங்கயம் அருகே கோயிலுக்கு சென்று திரும்பியவர்களின் கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் கவிழ்ந்ததில் 4 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெரியசோடகை, கஸ்பா காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(30). இவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று பழனி கோயிலுக்குச் சென்றுவிட்டு இன்று காலை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை வெங்கடேஷ் ஓட்டினார். கார் காங்கயம் அருகே சென்னிமலை சாலையில் திட்டுப்பாறை என்ற இடத்தில் காலை 10:30 மணிக்கு சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் புளியமரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், விபத்தில் காரில் பயணம் செய்த ரங்கநாதன், அவரது மனைவி ஜோதி (40), லட்சுமி (40) மற்றும் வெங்கடேசின் மகள் ஜெனிதா (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வெங்கடேஷ் உட்பட 5 பேர் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.