இடிந்து விழும் நிலையில் பேருந்து நிலைய மேற்கூரை..!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பேருந்து நிலையத்தின் மேற்கூரையும், தூண்களும் சிதிலமடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.



அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் உடனடியாக இவற்றை சரி செய்யாவிட்டால் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்துக்கும் மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பழைய பேருந்து நிலையத்தில் ஆபத்தான நிலையில் காணப்படும் கான்கிரீட் மேற்கூரைகள் மற்றும் தூண்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...