பார்க் கல்லுரி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமாங் பதானி பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
கோவை : பார்க் கல்லுரி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமாங் பதானி பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

கணியூரில் உள்ள பார்க் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பார்க் குளோபல் பள்ளியில் பயிலும் மாணவி வைஷ்ணவியின் யோகா நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் பேசிய, பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்று வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டி20 கிரிக்கெட் பயிற்சி முகாமில் 30 உறுப்பினர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்ட பி.சி.டி. மாணவர்கள் மூவரையும் பாராட்டினார்.
மேலும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 15 வருடங்களாக, பல்கலைக்கழகம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பதக்கம் பெறும் மாணவரின் அந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை பார்க் கல்வி நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் நடைமுறையையும் அவர் அறிவித்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி, வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அப்போது, பேசிய அவர், பல இடங்களுக்குச் சென்று மாணவர்களை விளையாட்டு துறையில் ஊக்குவிப்பதனை தமது விருப்பமாகத் தெரிவித்தார். கல்விக்கு இணையாக விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.