2 வயது சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த பரிதாபம்

நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது. 

மலை மாவட்டமான நீலகிரியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது, சாலைகளுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், உதகையில் இருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான வேல்வியூ பகுதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி ஒன்று வாகனத்தில் அடிப்பட்டு இருந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த சிறுத்தைப்புலியின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மலை மாவட்டங்களில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் வனவிலங்குகள் பலியாகி வருவதாகவும், இதுபோன்று நிகழ்ந்தால்,   சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது வனத்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...