பெண்களுக்கான இருசக்கர மானிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தமிழகத்தில் பெண்களுக்கான இருசக்கர மானிய திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பெண்களுக்கான இருசக்கர மானிய திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பெண்களுக்கான இருசக்கர மானிய திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், விழா நடக்கும் சென்னை கலைவாணர் அரங்கிற்கு வந்த பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி, 70 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில்,  5 பெண்களுக்கு மானிய ஸ்கூட்டரை வழங்கி, இருசக்கர மானிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், "அன்புமிக்க சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் தலை வணங்குகிறேன். மகாகவி பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமை கொள்கிறேன். ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பங்கு பெறுவது மகிழ்ச்சி. அவரின் கனவுத் திட்டமான மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். பெண்கள் மேம்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரு திட்டங்களும் மகத்தானது. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் எந்தவித உத்தரவாதமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தில் பயன் பெற்றவர்கள் 70 சதவீதம் பேர் பெண்கள். ஜெயலலிதா எங்கிருந்தாலும் உங்கள் முகங்களில் மகிழ்ச்சியைக் கண்டு அவர் மகிழ்வார். குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் குடும்பமே படித்ததற்கு சமம். பெண்ணின் நலம் பேணினால் குடும்ப நலன் மேம்படும். சுகாதாரம், விவசாயிகளின் நலனை இலக்காகக் கொண்டு அரசு செயல்படுகிறது. சூரிய மின்சக்தி, தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாய கூட்டணியில் 14-வது நிதி குழுவின் மூலம் தமிழகத்திற்கு ரூ. 1.80 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் பா.ஜ.க., ஆட்சியில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மகப்பேறு விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தின் மூலம் அதிகளவில் பெண்கள் பயன்பெறுகின்றனர். 31 கோடி ஜன்தன் திட்டத்தில் 16 கோடி வங்கி கணக்குகள் பெண்களுடையது. 3.5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெண்கள் உரிமை மதிக்கப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 9.5 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் குடும்பத்திற்கு பெரும் பயனைத் தரும். 

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் தமிழக விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். மீன்பிடித்தலை நவீனமயமாக்கியதன் மூலம் தமிழகம் பயன்பெற்றது. மீனவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது," இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...