கோவையில் பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
கோவை : கோவையில் பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

நகரை தூய்மையாக வைக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள், தட்டுகள் போன்றவை கோவை ஸ்மார்ட்சிட்டி லிமிடெட் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காகித டம்ளர்கள் மற்றும் தட்டுகள், மற்ற தர பொருட்களைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, நகரின் வளத்தைப் பெருக்குவதற்காகவும், குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் இந்த தொழிலைப் பிரபலப்படுத்துவதற்காகவும், தொழில் தொடங்க ஆர்வாக உள்ள தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, நேற்று மாலை அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரிக்கு எதிரே உள்ள அன்னபூர்ணா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :- தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்பதற்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கிய காரணமாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் அனைத்து கடைகளில் விற்கப்படுகிறது. காரணம், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது நாகரீகம் ஆகிவிட்டது. எனவே, அதனை விநியோகிக்க தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், மக்கும் தன்மையுள்ள பைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தரங்கானது, குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் என்பதால் தொழில்முனைவோர்களுக்கு பரிந்துரை செய்யப்டுகிறது. இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள், தட்டுகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டன.