கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பதில், மாநகராட்சி மெத்தனம் காட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கோவை : கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பதில், மாநகராட்சி மெத்தனம் காட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 654 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு உள்ளது. இதில், 238 ஏக்கர் பரப்பளவில் குப்பை பரவி காணப்படுகிறது. மாநகராட்சியின் 100 வார்டுகளில் தினசரி 850 டன் வரை குப்பை சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இந்த நிலையில், இந்தக் குப்பைக்கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கொழுந்துவிட்டு எரிகின்றன. இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணயில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் வண்டிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைப்பதில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். சுமார், 3 1/2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து எரிந்து வரும் இந்த தீயினை முழுவதுமாக அணைக்க சுமார் 2 நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அவ்வப்போது பயங்கர வெடிசத்தமும் கேட்பதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.