சிறுவாணி நீரை திருடும் கேரளம்

சிறுவாணி அணையின் அவசர கால குழாய் வழியாக தண்ணீரை கேரளா முறைகேடாக திருடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை : சிறுவாணி அணையின் அவசர கால குழாய் வழியாக தண்ணீரை கேரளா முறைகேடாக திருடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணை கோவை நகர மக்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த நிலையில், நேற்று மாலை சிறுவாணி அணையின் அவசரகால குழாய் வழியாக, எந்த விதமான முன் அறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 



சிறுவாணி ஆற்றில் கலக்கும் இந்த நீரை, தமிழகத்திற்குள் வராமல் தடுக்க அட்டப்பாடியில் ஐந்து இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீரை தடுக்கும் விதமாக போர் கால அடிப்படையில் கேரள அரசு பணிகளை நடத்தி வருகிறது. 

தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் இனி வரும் காலங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

எனவே தமிழக அரசு உடனடியாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் சிறுவாணி ஆற்றில் கட்டப்படும் தடுப்பணை பணிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. 

அவ்வாறாக செய்யாவிடில் சிறுவாணி நீரை நம்பியிருக்கும் தமிழக நகரங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...