கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் இன்று ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் இன்று ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட பகுதியில் மழை அளவு குறைந்து வருகிறது. ஆனாலும் ஆண்டு தோறும் வழங்கும் தண்ணீரை தமிழகம் கேரளாவுக்கு திறந்து விட்டு வருகிறது. இந்த ஆண்டு பி.ஏ.பி. திட்டத்தில் சராசரியை விட குறைவான மழையே பெய்தது. இதனால், கேரளத்திற்கு திறந்து விடும் நீரை தமிழக அரசு குறைத்தது. இதனைக் கண்டித்து கேரளா விவசாயிகள் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தினர்.
நேற்று தமிழக-கேரள எல்லையில் கேரள எம்.எல்.ஏ கிருஷ்ணகுட்டி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இந்த திடீர் முற்றுகையையடுத்து நகைக்கடை மூடப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.