கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில் பக்கவாத சிகிச்சை மையம் கொண்ட ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோவை : கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில் பக்கவாத சிகிச்சை மையம் கொண்ட ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில் ஆசியாவிலேயே முதன்முறையாக நடமாடும் பக்கவாத சிகிச்சை மையம் கொண்ட ஆம்புலன்ஸ் திட்டமானது இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி, கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பக்கவாத பாதிப்பு ஏற்படும் போது மூன்று மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சிகிச்சைக்குத் தேவையான சி.டி. ஸ்கேன் வசதி உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ வல்லுநர்களுடன் தொடர்பில் இருக்கும் படியான வசதிகளும், சி.டி. ஸ்கேன் உள்ளிட்டவற்றின் முடிவுகளை பரிமாறிக்கொள்வதற்கான வசதிகளும் இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும் இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியமர்த்தப்பட்டு இருப்பதால் பக்கவாத பாதிப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும். ஆசியாவிலேயே பக்கவாத சிகிச்சை தொடர்பான பிரச்சினைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.