பக்கவாத சிகிச்சை மையம் கொண்ட ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில் பக்கவாத சிகிச்சை மையம் கொண்ட ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை : கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில் பக்கவாத சிகிச்சை மையம் கொண்ட ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 



கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில் ஆசியாவிலேயே முதன்முறையாக நடமாடும் பக்கவாத சிகிச்சை மையம்  கொண்ட ஆம்புலன்ஸ் திட்டமானது இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இந்த திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி, கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



பக்கவாத பாதிப்பு ஏற்படும் போது மூன்று மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சிகிச்சைக்குத்  தேவையான சி.டி. ஸ்கேன் வசதி உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ வல்லுநர்களுடன் தொடர்பில் இருக்கும் படியான வசதிகளும், சி.டி. ஸ்கேன் உள்ளிட்டவற்றின் முடிவுகளை பரிமாறிக்கொள்வதற்கான வசதிகளும் இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும் இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியமர்த்தப்பட்டு இருப்பதால் பக்கவாத பாதிப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும்.  ஆசியாவிலேயே பக்கவாத சிகிச்சை தொடர்பான பிரச்சினைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...